திரிபுரா
மாநிலத்தில், இளம் பெண்ணை வீடுபுகுந்து கற்பழித்த கும்பல், அந்த பெண்ணை,
நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து, அடித்த கொடுமை நிகழ்ந்துள்ளது.
திரிபுரா
மாநில தலைநகர், அகர்தலா அருகில் உள்ளது, பிஷால்கார். 37 வயது பெண் ஒருவர்,
வயலுக்கு சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தார். ஏழு பேர் கொண்ட கும்பல்,
அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது.அவர்கள் பிடியிலிருந்து தப்பிய அந்த
பெண், ஓடி வந்து, வீட்டில் நுழைந்து கொண்டார். அந்த பெண்ணை தேடிய கும்பல்,
வயல்வெளியில் அந்த பெண், பாலியல் தொழில் செய்தார் என, தவறாக கதை கட்டி
விட்டுள்ளது.இதை நம்பிய கிராமத்தினர், பெண்ணின் வீட்டை காண்பித்துள்ளனர்.
வீட்டில் புகுந்த கும்பல், அந்த பெண்ணை கற்பழித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து, அந்த பெண் திட்டியதால், கோபம் கொண்ட கும்பல், பெண்ணை
வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தது.
பாலியல் தொழில் செய்ததாக, தவறாக
கூறப்பட்டதால், அந்த பெண் மீது, கிராமத்தினரும் கோபமாக இருந்தனர்.
கற்பழிப்பு கும்பலுடன் சேர்ந்து, கிராமத்தினரும், அந்த பெண்ணை, அருகில்
இருந்த மரத்தில் கட்டி வைத்து, கடுமையாக அடித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண்
கொடுத்த புகாரை பெற்ற போலீசார், நேற்று முன்தினம், அந்த கும்பலை கைது
செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஐந்து வயதில் குழந்தை உள்ளது;
அவளின் கணவர் யார், சம்பவம் நடந்த போது, அவர் எங்கே சென்றிருந்தார் என்ற
விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்த கொடுமையான செயலை, திரிபுரா பெண்கள் கமிஷன் தலைவி, பூர்ணிமா ராய் கடுமையாக கண்டித்துள்ளார்.
-நமது கவுகாத்தி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.