காசியாபாத்:டில்லி
அருகே உள்ள நொய்டாவில், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை கொலை செய்த,
சுரேந்தர் கோலி மீதான, 5 வயது பெண் குழந்தை கற்பழிப்பு வழக்கில்,
குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று தீர்ப்பு
வழங்கப்படுகிறது.நொய்டா அருகே உள்ள, நிதாரி கிராமத்தில், மனிந்தர் சிங்
பாந்தர் என்பவர் வீட்டில் வேலை பார்த்த சுரேந்தர் கோலியும், மனிந்தர்
சிங்கும், 19 இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை, கற்பழித்து, கொலை செய்ததாக
கைது செய்யப்பட்டு, சில ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
இதற்கு முந்தைய,
நான்கு வழக்குகளில், கோலிக்கும், அவனுக்கு உடந்தையாக இருந்த மனிந்தர்
சிங்குக்கும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 5 வயது பெண்
குழந்தையை கடத்தி, கற்பழித்து, கொலை செய்து, தடயங்களை அழித்த வழக்கில்,
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, "கோலி குற்றவாளி' என, நேற்று முன்தினம்,
காசியாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.தண்டனை விவரத்தை இன்று
அறிவிப்பதாக, நேற்று முன்தினம், நீதிபதி, எஸ்.லால் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று, கோலிக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளதால், காசியாபாத்தில்
பரபரப்பு நிலவுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.