இயேசுவை வரவேற்போம்
செய்யும்
தொழில் எதுவாக இருந்தாலும், அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
இருக்க வேண்டும். அதை முறையாக செய்ய வேண்டும். வசதியும், வாய்ப்பும்
தடையில்லாமல் கிடைக்கிறது என்பதற்காக தன்னிலை மறந்து, பிறர்நலத்தை
சீரழிக்கும் வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால்,
அதற்கான தண்டனையை அனுபவிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.எனவேதான், இயேசு
கிறிஸ்து, ""அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது. வழியும் விரிவானது. அதன்
வழியே செல்வோர் பலர். வாழ்வுக்கு செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது.
வழியும் மிகக்குறுகலானது. இதைக் கண்டுபிடிப்போர் சிலரே,'' என்று
எச்சரித்துள்ளார்.இறைவார்த்தைகளை கேட்டு, அதன்படி நடக்காதவர்களின்
வாழ்க்கை, மணல் மீது கட்டப்படும் வீடு போன்று நிலைகுலைந்து விடும்.
உறுதியான பாறையின்மீது வீட்டின் அடித்தளம் அமைக்கப்படுமேயானால் அது
என்றென்றும் நிலைத்திருக்கும். இதை மனதில் கொண்டு நம் வாழ்க்கையை
இறைவனுக்கு உகந்ததாக மாற்றியமைக்க வேண்டும்.""மனம் மாறுங்கள். ஏனெனில்
விண்ணரசு நெருங்கி விட்டது,'' என்ற இயேசு கிறிஸ்துவின் குரல் எப்போதும் நம்
உள்ளத்தில் ஒலிக்கட்டும். அவரது பிறப்பினைக் கொண்டாட மகிழ்வுடன்
காத்திருக்கும் நாம் அனைவரும், இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து
காட்டுவோம்.தொகுப்பு: எம்.பி. அருள் செல்வன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.