பீஜிங்:சீனாவில்,
தலைநகர் பீஜிங்கிலிருந்து, குவாங்சோ என்ற நகருக்கு இடையேயான, 2,300
கி.மீ., தூரத்துக்கு, அதிவேக ரயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது.
அதிவேக
ரயில் சேவையில், உலக அளவில், சீனா முன்னோடியாக உள்ளது.சீனாவின் பல
நகரங்களுக்கு, "புல்லட் ரயில்' எனப்படும், அதிவேக ரயில்கள்
இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, தலைநகர், பீஜிங்கிலிருந்து, ஷாங்காய்
நகருக்கு, மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய "புல்லட் ரயில்'
சேவை துவக்கப்பட்டது.
இதன் மூலம், 1,300 கி.மீ., தூரத்தை, இந்த ரயில், 4:50
மணி நேரத்தில் சென்றடைகிறது.பீஜிங்குக்கும், ஹாங்காங் அருகே உள்ள குவாங்சோ
நகருக்கும் இடையே, நாளை மறுநாள், அதிவேக ரயில், தினமும் இயக்கப்படுகிறது.
2,300 கி.மீ., தூரத்தை, இந்த ரயில் 7:60 மணி நேரத்தில் கடக்கும். இதற்கான
சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன.விமான கட்டணத்தை விட, இந்த
ரயில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், நாளை மறுநாள், இந்த ரயிலில்
பயணிப்பதற்கு, இப்போதே, 2,000 பேர், முன்பதிவு செய்து விட்டனர்.சீனாவில்,
புல்லட் ரயிலில் அடிபட்டு, கடந்த ஆண்டு, 40 பேர் பலியாகி உள்ளனர்.பீஜிங் -
குவாங்சோ இடையேயான, "புல்லட் ரயில்,' நேற்று முன்தினம், செங்சோ நகரம் வரை,
அதாவது, 693 கி.மீ., தூரம் பயணிகளுடன் சோதனை ரீதியாக இயக்கப்பட்டது.பீஜிங் -
குவாங்சோ இடையே, சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க, 20 மணி நேரம் ஆகும்.
தற்போது, இந்த புல்லட் ரயிலில், 7:60 மணி நேரத்தில் பீஜிங்கிலிருந்து,
குவாங்சோவை சென்றடைய முடிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.