பீஜிங்:சீனாவில்,
ராணுவ அதிகாரிகளின் ஆடம்பர விருந்துகளுக்கு, தடை விதிக்கப்பட்டு
உள்ளது.சீனாவில், சமீபத்தில் நடந்த, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில்,
புதிய அதிபர் மற்றும் துணை அதிபர்கள் அறிவிக்கப்பட்டனர்."ஊழலை ஒழிப்பது
தான் என்னுடைய முதல் வேலை' என, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள, சி
ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையின், முதல்
நடவடிக்கையாக, ராணுவ அதிகாரிகளின் ஆடம்பர நடவடிக்கைகளுக்கு தடை
விதிக்கப்பட்டு உள்ளது.உலகிலேயே அதிக வீரர்களை கொண்ட ராணுவம், சீன ராணுவம்
தான். கிட்டத்தட்ட, 30 லட்சம் வீரர்களை கொண்டுள்ளது.சீன அரசு, கடந்த வாரம்
வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:ராணுவ அதிகாரிகள், நட்சத்திர
ஓட்டலில் தங்கக்கூடாது. ராணுவம் தொடர்பாக நடக்கும் விழாக்களில் மது
விருந்து கூடாது. ராணுவ அதிகாரிகள் பயணிக்கும் வாகனங்களில், "சைரன்' ஒலிக்க
கூடாது. அவர்கள் வருகையையொட்டி பேனர்களோ, சிவப்பு கம்பள வரவேற்போ இருக்க
கூடாது.ராணுவ அதிகாரிகளின் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்ப
உறுப்பினர்களும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அரசு
உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.