World news | எகிப்து அரசியலமைப்பு சட்ட வரைவு : இரண்டு கட்ட ஓட்டெடுப்பு மூலம் ஒப்புதல்| Dinamalar

எகிப்து அரசியலமைப்பு சட்ட வரைவு : இரண்டு கட்ட ஓட்டெடுப்பு மூலம் ஒப்புதல்

Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கெய்ரோ:எகிப்து நாட்டின், அரசியலமைப்பு சட்ட வரைவு, இரண்டு கட்ட ஓட்டெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, புரட்சியில் மக்கள் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.
ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர், முகமது முர்சி, அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தனக்கு, எல்லையற்ற அதிகாரம் அளிக்க வழி செய்யும் அரசியல் சாசனத்தை, கடந்த மாதம், முர்சி வெளியிட்டார். இதற்கு, எகிப்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, புதிய அரசியலமைப்பு சட்ட வரைவு குறித்து, பொது மக்களின் விருப்பத்தை அறியும், முதல் கட்ட பொது ஓட்டெடுப்பு, 15ம் தேதி நடந்தது. இரண்டாவது கட்ட ஓட்டெடுப்பு, நேற்று முன்தினம் நடந்தது.நேற்று முன்தினம், 71 சதவீதம் ஓட்டு பதிவானதாகக் கூறப்பட்டது.இது குறித்து, எகிப்து அதிபர், முகமது முர்சி குறிப்பிடுகையில், ""இரண்டு கட்ட ஓட்டெடுப்பின் மூலம், 65 சதவீதம் பேர், இந்த சட்ட வரைவை அங்கீகரித்துள்ளனர்,'' என்றார்.எனினும், இது குறித்த முறையான அறிவிப்பு, அடுத்த வாரம், வெளியிடப்பட உள்ளது.புதிய அரசியலமைப்பு சட்ட வரைவில், இஸ்லாமிய நடைமுறைகள் அதிகம் உள்ளதாக, எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை