பியூனஸ்
அயர்ஸ்:சகோதரியை கொலை செய்தவனை, அர்ஜென்டினாவை சேர்ந்த பெண், திருமணம்
செய்து கொள்ள ஆர்வமாக உள்ளார்.தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவின்,
சான்டா குருஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டர் சிங்கோலானி. இதே பகுதியை
சேர்ந்த மாடல் அழகி ஜொகானாவை கொலை செய்ததாக, 13 ஆண்டு சிறை தண்டனை
அனுபவித்து வருகிறார்.ஜொகானாவும், எடித் கசாஸ் இருவரும் இரட்டை சகோதரிகள்.
2010ம் ஆண்டு, ஜூலை மாதம் ஜொகானா, படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே,
கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்டரை, தீவிரமாக காதலிக்கிறார் ஜொகானாவின்
சகோதரி, எடித் கசாஸ். இதற்கு எடித்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். இருப்பினும், விக்டரை மணக்கும் திட்டத்தை மாற்றிக்கொள்ள
மறுத்துவிட்டார் எடித்."என் காதலர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது'
என, கூறிய எடித், 21ம்தேதி, காதலர் விக்டரை மணக்க தயாராக
இருந்தார்.பொதுமக்கள் முன்னிலையில், இந்த திருமணம் நடப்பதற்கு, அர்ஜென்டினா
கோர்ட், தடை விதித்துள்ளது. கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால், விக்டர்,
மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வரும், 31ம்தேதி, இந்த திருமணம்
குறித்து, கோர்ட் தனது இறுதி தீர்ப்பை அளிக்க உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.