World news | தலிபான் தளபதியை கொன்ற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி| Dinamalar

தலிபான் தளபதியை கொன்ற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி

Updated : டிச 24, 2012 | Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தலிபான் தளபதியை கொன்ற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி

லண்டன்:ஆப்கானிஸ்தானில், பாதுகாப்புப் படையில் பணியாற்றிய, பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றதாக, தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, ராயல் விமானப் படையில், பைலட்டாக பயிற்சி பெற்றவர். ஆப்கானிஸ்தானில், பணியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் படையில், இவர், இடம் பெற்றுள்ளார்.
தலிபான்களை ஒடுக்கும் பணியில், ஹெல்மான்ட் மாகாணத்தில், இவர், அக்., மாதம் ஈடுபட்டிருந்தார்.பிரிட்டன் விமானப் படையின், "அப்பாச்சி' ரக ஹெலிகாப்டரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, ஏவுகணை ஒன்றை ஏவி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றார் என, பிரிட்டன் பத்திரிகைகள், தற்போது செய்தி வெளியிட்டு உள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை