E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"மழையை நம்பி மோசம் போனோம்' விரக்தியில் விவசாயிகள்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 டிச
2012
01:11

மேலூர்: சிறிதளவு மழையையும், ஊற்று நீரையும் நம்பியே ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வரும் மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டி விவசாயிகள், இந்தாண்டு மழை இல்லாததால் விரக்தியில் உள்ளனர்.
இக்கிராமத்தின் விவசாயம், அங்குள்ள மலை மீது இருந்து ஓடி வரும் நீரையும், சுற்றியுள்ள ஊற்றுக்களையும் மட்டுமே நம்பி உள்ளது. இவ்வூரில் இடதுபுறமுள்ள நரசிங்கம்பட்டியும், வலப்புறமுள்ள அ.வள்ளாலபட்டியும் பெரியாற்று கால்வாய் நீரினை பயன்படுத்துகிறது. சற்று பள்ளமான பகுதியில் அமைந்துள்ள அரிட்டாபட்டிக்கு, சுற்றியுள்ள மலைகள் மீது பொழியும் மழை நீரே விவசாயத்திற்கு போதுமானதாக இருந்தது.
இத்துடன் பெரியாற்று கால்வாய் நீரும் சேர்ந்தால், விவசாய பகுதிகள் மூழ்கிவிடும் என கருதி, "கால்வாய் தேவையில்லை' என அப்போது ஊர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற பகுதியில் விவசாயம் பொய்த்தாலும், இப்பகுதியில் நெல் விளைந்து விடும் அதிசயமும் நிகழும். ஆனால், இந்தாண்டு அதில் "மண்' விழுந்துவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ரவிச்சந்திரன் : அரிட்டாபட்டியில் உள்ள 350 ஏக்கர் நிலத்தில், முதல் மழை பெய்தவுடன் 300
ஏக்கருக்கு நடவு பணி முடிந்தது. மேலும் சில நாட்கள் மட்டும் மழை பெய்திருந்தால், நிச்சயம் விவசாயத்தை காப்பாற்றி
இருக்கலாம். கிணறு வைத்துள்ளவர்கள் கூட மின் தடையால்,
நடவு செய்யப்பட்டுள்ளவற்றை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.
முத்து : ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கொள்ள கண்மாய், கொள்ள குளம் தடுப்பு அணை சுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாயின் மதகுகள் மண் மேடிட்டுள்ளது. இக்கண்மாயை ஒட்டி 170 ஏக்கர் பாசனமும், காமன்குளத்ததை நம்பி 110 ஏக்கர் நிலங்களும் உள்ளன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயை தூர் வாரி, செப்பனிட்டால் தண்ணீரை முறையாக தேக்க முடியும். மழை நீரை மட்டுமே நம்பி உள்ள எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.