கெய்ரோ:எகிப்து
நாட்டின், அரசியலமைப்பு சட்ட வரைவு, இரண்டு கட்ட ஓட்டெடுப்பு மூலம்
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டத்தட்ட, 30
ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, புரட்சியில்
மக்கள் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர், முகமது முர்சி, அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தனக்கு,
எல்லையற்ற அதிகாரம் அளிக்க வழி செய்யும் அரசியல் சாசனத்தை, கடந்த மாதம்,
முர்சி வெளியிட்டார். இதற்கு, எகிப்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம்
தெரிவித்தனர்.
இதற்கிடையே, புதிய அரசியலமைப்பு சட்ட வரைவு குறித்து,
பொது மக்களின் விருப்பத்தை அறியும், முதல் கட்ட பொது ஓட்டெடுப்பு, 15ம்
தேதி நடந்தது. இரண்டாவது கட்ட ஓட்டெடுப்பு, நேற்று முன்தினம்
நடந்தது.நேற்று முன்தினம், 71 சதவீதம் ஓட்டு பதிவானதாகக் கூறப்பட்டது.இது
குறித்து, எகிப்து அதிபர், முகமது முர்சி குறிப்பிடுகையில், ""இரண்டு கட்ட
ஓட்டெடுப்பின் மூலம், 65 சதவீதம் பேர், இந்த சட்ட வரைவை
அங்கீகரித்துள்ளனர்,'' என்றார்.எனினும், இது குறித்த முறையான அறிவிப்பு,
அடுத்த வாரம், வெளியிடப்பட உள்ளது.புதிய அரசியலமைப்பு சட்ட வரைவில்,
இஸ்லாமிய நடைமுறைகள் அதிகம் உள்ளதாக, எதிர்க்கட்சியினர் புகார்
தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.