லண்டன்:மாற்று
திறனாளியான கணவரை, டில்லியில் தனியாக தவிக்க விட்ட, சுவிட்சர்லாந்து வங்கி
அதிகாரிக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்
பட்டு
உள்ளது.சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரை சேர்ந்த, 65 வயதான வங்கி அதிகாரி,
தனது, 74 வயது கணவரை, 2008ல், இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்து வந்தார்.
நடக்க
முடியாத நிலையில், சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும், அவரது கணவரை,
டில்லியில் ஒரு வீட்டில் தங்க வைத்து விட்டு, இவர் சுவிட்சர்லாந்தில்
சுகபோக வாழ்வு வாழ்ந்தார்.போதிய ஆதரவில்லாத நிலையில், ஒன்பது மாதத்தில்,
அவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, டில்லியிலேயே கணவரை அடக்கம்
செய்து விட்டார் இந்த வங்கி அதிகாரி.இந்தியாவில், இந்த முதியவரை
பராமரித்து வந்த ஊழியர் மூலம், இந்த விஷயம், சுவிஸ் அதிகாரிகளுக்கு
தெரியவந்தது. இது குறித்து அந்த பெண்ணிடம், போலீசார் விசாரித்தனர்.
"கணவருக்கு
குளிர் ஒத்து கொள்ளாததால், மிதமான வெப்பம் கொண்ட டில்லியில் தங்க
வைத்தேன்' என, கூறினார். ஆனால், கணவரை பராமரிக்க மாதம், ஐந்து லட்சம்
ரூபாய் செலவிட்டதாக, கணக்கு காட்டிஉள்ளார்.புதிய சூழலில், போதிய
பராமரிப்பின்றி கணவரை இறக்க விட்ட காரணத்துக்காக, இந்த பெண் அதிகாரிக்கு
கடந்த ஆண்டு, ஆறு மாதம், சிறை தண்டனை அளிக்கப்பட்டது.ஆனால், அரசு தரப்பு
வழக்கறிஞர்கள், இவருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்க கோரினர்.
இதையடுத்து, தற்போது, வங்கி அதிகாரிக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை
அளிக்கப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.