மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில், சிறுவன் சேகரித்து வைத்திருந்த முட்டையிலிருந்து பாம்பு குட்டிகள் வெளிவந்தன.ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணம், டவுன்ஸ்வில்லி பகுதியை சேர்ந்தவர் டோனா சிம். இவரது மகன் கிலே குமிங், 3.தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிலே, அங்கு சிதறிக் கிடந்த முட்டைகளை, விளையாட்டாக பொறுக்கி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பொறுக்கி வைத்த, 12 முட்டைகளை, வீட்டுக்கு எடுத்து வந்து, தன் அறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்திருந்தான்.இவனது தாய் டோனா, சமையல் செய்வதற்காக, இவனது அறையில் இருந்த பாத்திரத்தை எடுத்துச் சென்று திறந்த போது, ஒன்பது விஷப் பாம்பு குட்டிகள் நெளிவதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக அந்த பாத்திரத்தை மூடி வைத்து விட்டார்.வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து, ஒன்பது பாம்பு குட்டிகளை எடுத்துச் சென்று, காட்டில் விட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.