மதுரை:தமிழக மின் உற்பத்தியில் 20 ஆண்டுகளாக தனியாரை ஊக்குவித்ததால் தான், வாரியத்துக்கு ரூ.53 ஆயிரம் கோடி வரை கடன் ஏற்பட்டது, என மதுரையில் நடந்த கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் மின்தடை மற்றும் "டெங்கு' நோய் பாதிப்பு குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. செயலாளர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தி பேசியதாவது:
மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக இருந்த தமிழகத்தில், 20 ஆண்டுகளாக பயனுள்ள திட்டங்களும் செயல்படுத்தவில்லை. தனியாரிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து வாங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டப்பட்டது. ஒரு காற்றாலை உற்பத்தி மையம்கூட அரசிடம் இல்லை. மத்திய அரசு மானியத்தை பெறும் தனியாரிடமிருந்து, அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டியதால், வாரியத்துக்கு ரூ.53 கோடி கடன் ஏற்பட்டது.
எரிவாயு மூலம் மின்உற்பத்தி செய்யும் 5 மையங்களில் நான்கு தனியாருக்கு சொந்தமானவை. அரசு மையத்தில் மட்டும் அடிக்கடி பழுதடைய காரணம் என்ன. 35 சதவீதம் மின்சாரத்தை தனியாரை நம்பிஇருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில்
10 மின் உற்பத்தி திட்டங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு
நடைமுறையால் இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் அரசுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம், என்றார்.
"டெங்கு' பாதிப்பு குறித்து டாக்டர்
அரிகர மகாதேவன் பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் வக்கீல் வாஞ்சி
நாதன் ஏற்பாடு செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.