மதுரை:மதுரையில், மத்திய அமைச்சர் அழகிரியை வாழ்த்தி, தி.மு.க.,வினர் எழுதிய சுவர் விளம்பரங்களை, மாநகராட்சி அதிகாரிகள் அழித்தனர்.
அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில், தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். எம்.ஜி.ஆர்., முதல்வர் ஜெ., பிறந்த நாளுக்கு விளம்பரம் செய்ய முயன்ற அ.தி.மு.க., வினருக்கு, சுவர் கிடைக்கவில்லை. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பாவிடம், அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, "அரசு கட்டடங்கள், சுவர்களில் கட்சியினர் விளம்பரம் செய்யக்கூடாது. மீறினால் மாநகராட்சி மூலம் அழிக்கப்பட்டு, அதற்கான செலவு, அந்தந்த கட்சியினரிடம் வசூலிக்கப்படும்,' என, மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் அறிவித்தார்.
இதன் பிறகும், சுவர் விளம்பரங்களில் தி.மு.க., வினர் "முன்னணி' வகித்தனர். இந்நிலையில், மாநகராட்சி பூங்காக்கள், அலுவலக சுவர்களில் இருந்த தி.மு.க., விளம்பரங்களை, மாநகராட்சியினர் அழித்தனர். இதற்கான செலவுத் தொகையை, அபராதமாக விதிக்க உள்ளனர்.
அ.தி.மு.க., வினரின் விளம்பரங்கள் குறித்து, மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள தி.மு.க., வினர், அவற்றையும் அழிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.