செஞ்சி:தையூரில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
செஞ்சி தாலுகா தையூர் கிராமத்தில் உள்ள டிரான்ஸ் பார்மர் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பழுதாகியுள்ளது. இந்த டிரான்ஸ் பார்மரில் இருந்து 37 விவசாய மின் மோட்டார்களுக்கும், ஒரு தெருவிற்கும் மின் சப்ளை செல்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை பழுதான இந்த டிரான்ஸ்பார்மரை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் சரி செய்து வைத்தனர்.
தற்போது மீண்டும் டிரான்ஸ்பார் பழுதானதால் என்ன செய்வதென்று புரியாமல் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.
தண்ணீர் பாய்ச்சுவதற்கு வழியின்றி இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 100 ஏக்கர் நெற்பயிர்கள் அடுத்த நில நாட்களில் காய்ந்து விடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து மொடையூரில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் பிரச்னை தீரவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சில விவசாயிகள் பயிரில் மாட்டை விட்டு மேய்த்து விட்டனர்.
மீதம் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்கு மின்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.