விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த
ராதாபுரத்தில் கத்தரிக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளது. இருந்தாலும் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகள் நெல், மணிலா, கரும்பு என பருவ கால பயிர்களை சாகுபடி செய்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, தங்கள் உழைப்பிற்கான பலனை பெற்றனர்.
தற்பொது ஆட்கள் பற்றாக்குறை ஏற்ப்பட்டிருப்பதால் தங்கள் உழைப்பிற்கு உடனடி பலன் தரும் பயிர்களை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். தினமும் அல்லது வாரம் ஒருமுறை உழைப்பிற்கான பலனை கை நிறைய பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பகுதி விவசாயிகள் அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தும் கத்தரிக்காயை சாகுபடி செய்துள்ளனர்.
இதனை வாரம் ஒரு முறை அறுவடை செய்து சென்னை கோயம்பேடு மார்க்கட்டிற்கு அனுப்பி, பணம் சாம்பாதிக்கின்றனர். அதிக விளைச்சல் மற்றும் மகசூலை தரக்கூடிய ரகமாக உஜாலா ரக கத்தரிக்காயை பயிர் செய்துள்ளனர்.
இந்த ரக காய்கள் ஏக்கருக்கு வாரந்தோறும் 600 கிலோ முதல் 700 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. ராதாபுரத்தை சேர்ந்த மாணிக்கம்,58, என்பவர் இரண்டு ஏக்கர் நிலத்தில் உஜாலா ரக கத்தரிக்காயை பயிரிட்டுள்ளார்.
வாரத்திற்கு ஒரு முறை 20
(70 கிலோ) மூட்டைகள் கத்தரிக்காய் அறுவடை செய்வதாக
கூறுகிறார்.
சென்னையில் ஆரம்ப காலத்தில் கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்கப்பட்ட கத்தரிக்காய், தற்போது அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கிலோ 8 லிருந்து 10 ரூபாய் வரை விற்பதால் சரியான லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வரும் தை மாதத்தில் விலை ஏறுமுகமாக இருக்கும், அந்த நேரங்களில் அறுவடை செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என விவசாயிகள் கூறினார்.
அமோக விளைச்சல் நேரத்தில் தங்கள் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.