விழுப்புரம்:விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க, விவசாய பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
விழுப்புரம் வி.வி.ஏ., மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் தணிகாசலம் தலைமை தாங்கினார். தலைவர் சண்முகம் வரவேற்றார். சேர்மன் பாஸ்கரன் துவக்க உரையாற்றினார்.
மாநில துணை செயலா ளர் சுப்பையன், இணை செயலாளர்கள் கர்ணன், சீத்தாராமன், துணை செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர்.
மாநில விவசாய பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன், செயலாளர் தங்கமுத்து, ஊரகதொழில் துறை அமைச்சர் மோகன், மாவட்ட செயலாளர் லட்சுமணன், முன்னாள் அமைச்சர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் எம்.பி., ஆனந்தன், ஊராட்சிக்குழு தலைவர் அலமேலு வேலு, எம்.எல்.ஏ.,க்கள் நாகராஜன், அரிதாஸ், ஜானகிராமன், மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், பொருளாளர் தொள்ளாமூர் கண்ணன், ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் ரகுநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் பொன்சிவா, மகளிரணி செயலாளர் தமிழ்மொழி ராஜதத்தன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், இளைஞரணி செயலாளர் பசுபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு விதை, மரக்கன்றுகள் ஆகியவற்றை அமைச் சர் மோகன் வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், இளங்கோவன், அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர் முருகவேல், மாவட்ட பிரதிநிதி குணவதிராஜ் கலந்து கொண்டனர்.
காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுத்தமைக்கும், சித்திரை மாதத்தில் உழவர் பெருவிழா நடத்தியமைக்கும் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து விவசாயிகளும் தரமான மருத்துவத்தை பெற வழிவகுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்து.
காணை ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.ரயில்வே கேட் சேதம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.