காரியாபட்டி:சென்னையில், குத்தகைக்கு விடப்பட்டு, காணாமல் போன காரை, அதன் உரிமையாளர் காரியாபட்டியில் கண்டுபிடித்து, போலீசில் ஒப்படைத்தார்.
மதுரை, திருமங்கலத்தை சேர்ந்தவர் ஜவகர்பழனியப்பன்,43.இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு, புதிய டாடா இண்டிகோ மான்சா காரை வாங்கி, "டி போர்டு' லைசென்ஸ் எடுத்து, நண்பர் கிருஷ்ணன் மூலம், சென்னையில் உள்ள "ஏ.கே.டிராவல்ஸ்' நிறுவனத்தில் மாதம் ரூ. 36 ஆயிரம் வாடகை பேசி, குத்ததைக்கு விட்டார். ஒரு மாதம் மட்டும், அந்நிறுவனம் கார் வாடகையை, வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. அதன்பிறகு இரண்டு மாதங்கள் வாடகை செலுத்தவில்லை. காரையும் கண்ணில் காட்டவில்லை. சந்தேகமடைந்த ஜவகர் பழநியப்பன் சென்னை அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பல இடங்களில் தேடியும் கார் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று ஜவகர் பழநியப்பன், உறவினர்களுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு, திரும்பும் வழியில், காரியாபட்டியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்து நின்ற ஒரு காரை கவனித்த ஜவகர் பழநியப்பன், அது தன்னுடையது என்பதை அறிந்து, காரைப்பிடித்து காரியாபட்டி போலீசில் ஒப்படைத்தார். காரை ஓட்டி வந்த கமுதி மோகன்குமாரிடம் விசாரித்ததில், அவர் இந்த காரை இரண்டு லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து, சென்னையில் வாங்கி, தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்ததாக தெரிவித்தார். தங்கை மகளுக்கு ஒரு வயது நிறைவடைந்ததை யொட்டி, திருச்சுழியில் உள்ள குலசாமி கோயிலுக்கு அந்த காரில் வந்தபோது, குழந்தை அழுததால், பால் வாங்க காரியாபட்டியில் நிறுத்தியுள்ளார். அப்போது தான், ஜவகர்பழனியப்பன் பார்த்துள்ளார். அவரது புகார்படி, காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.