துறையூர்: கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்து, தலைமறைவான வாலிபரை, இரண்டு ஆண்டுகளுக்கு பின் போலீஸார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியபுரம் அடுத்த நாகநல்லூரைச் சேர்ந்தவர் கந்தசாமி, 63. இவரது மகன் மணி, 38. அதே ஊரைச் சேர்ந்த ராஜூவுக்கும், 50, கந்தசாமிக்கும் சொத்து தகராறு இந்து வந்தது. இரண்டு ஆண்டுக்கு முன் இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், கந்தசாமியும், மணியும் சேர்ந்து, ராஜூவை கொலை செய்ததாக, உப்பிலியபுரம் போலீஸர், இருவரையும் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில்
அடைத்தனர்.கந்தசாமி, மணி இருவரும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாயினர். இதில் கந்தசாமியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கந்தசாமிக்கு திடீரென உடல்நிலை மோசமாகி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தந்தை இறந்ததுக்கு கூட, மணி வராமல் தலைமறைவாகவே இருந்து வந்தார். இந்நிலையில், மணி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்ப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., செந்தில்குமார், ஏட்டுகள் சிவக்குமார், துரை, மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் திருச்செங்கோடு சென்று, மணியை கைது செய்தனர். துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் திருச்சி மத்திய சிறையில் மணியை அடைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.