துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த எரகுடியை சேர்ந்த ராமதாஸ் மனைவி பிரேமா, 58. பிரேமாவின் அண்ணன் டாக்டர் ரவீந்திரன், துறையூரில் "நிர்மல்' என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார். வீடும், கிளினிக்கும் ஒன்றாக உள்ளது. ராமதாஸ் உடல்நிலை சரியில்லாததால், பிரேமா தனது கணவரை, டாக்டர் ரவீந்திரன் வீட்டுக்கு, நேற்று அழைத்து வந்தார். வழக்கமாக எங்கு சென்றாலும், கணவரிடம் சொல்லிவிட்டு செல்லும் பிரேமா, கணவரிடம் சொல்லாமல், 200 அடி தூரத்தில் உள்ள அகிலா கண் மருத்துவமனைக்கு சென்றார். இதற்கிடையே, காளியம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் வேலுச்சாமி, 28, தனது டாடா சுமோ காரில், கண்ணனூரிலிருந்து நோயாளி ஒருவரை, ஏற்றிக் கொண்டு துறையூர் வந்தார். அகிலா கண் மருத்துவமனை அருகே உள்ள, பி.ஆர்., மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாத்தினர் கூறினர்.வேலுச்சாமி அவசர அவசரமாக நோயளியை ஏற்றிக்கொண்டு, டாடா சுமோ காரை வேகமாக "ரிவர்ஸ்' எடுத்தார். அப்போது, கண் பரிசோதனையை முடித்துக் கொண்டு, பிரேமா மீண்டும் தனது அண்ணன் வீட்டுக்கு நடந்து சென்றார். "ரிவர்ஸில்' வந்த டாடா சுமோ கார், பிரேமா மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையறிந்த, வேலுச்சாமி, பதட்டத்துடன் காரை முன்னோக்கி நகர்த்தியதில், டயருக்கடியில் சிக்கிய பிரேமா மீது கார் ஏறி இறங்கியது. இதைக்கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பிரமாவை மீட்டு, பாலாஜி என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.