ஐதரபாத் :தெலுங்கானா விவகாரத்தாலும், ஜெகன் மோகன் ரெட்டியாலும், ஆந்திர மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களை மாற்ற, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இன்னும் சில நாட்களில், ஆந்திராவில், கட்சியிலும், ஆட்சியிலும், மிகப் பெரிய மாற்றங்களை செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தில், கிரண் குமாரின் தலையும் உருளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கிரண் குமார் தவிர, மேலும் சில முக்கிய அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்படலாம். இளைஞர்களுக்கு, அதிக வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம்.இவ்வாறு டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.