திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே, குட்டையில் கார் பாய்ந்ததில், ஒருவர் இறந்தார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 39. இவர், வேலூரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார்.இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரின், நண்பர்களான சுரேஷ், பாரதி, காசி, ரவி, ஆகியோர் நேற்று முன்தினம் காரில் புதுச்சேரி சென்று விட்டு, இரவு வீடு திரும்பினர். அன்மருதை கிராமத்தில் உள்ள வளைவில் திரும்பும் போது, எதிர்பாராதவிதமாக கார் சாலையோரம் இருந்த குட்டையில் பாய்ந்தது. இதில், காரை ஓட்டி வந்த செந்தில்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.சுரேஷ், பாரதி, காசி, ரவி ஆகியோர், கார் கண்ணாடியை உடைத்து கொண்டு லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பெரணமல்லூர் போலீஸார் குட்டையில் மூழ்கிய காரையும், செந்தில்குமார் பிரேதத்தையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.