புதுடில்லி :கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவல்களை அடுத்து, நாடு முழுவதும் உள்ள, முன்னணி தங்க நகை வியாபாரிகளுக்கு சொந்தமான கட்டடங்களில், மத்தியஅரசின் வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.கடந்த வாரம் தலைநகர் டில்லியில் துவங்கிய இந்த சோதனை, உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என, தொடர்ந்து கொண்டிருக்கிறது.இந்த சோதனையின் பலனாக, தங்க நகைகள் மற்றும் தங்க வியாபாரிகள் பலர், 10 கோடி ரூபாய்க்கு மேல் சுங்க வரி செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அதிலும், டில்லியை சேர்ந்த ஒரு வியாபாரி மட்டும், எட்டு கோடி ரூபாயை, சுங்கத் துறைக்கு செலுத்தியுள்ளார்.அதேநேரத்தில், வெளிநாடுகளில் உள்ள சுங்கத் துறையின் உளவு பிரிவு அதிகாரிகளையும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு அனுப்பப்படும், பார்சல்களை தீவிரமாக கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.நேபாள எல்லைப் பகுதி வழியாக, தங்கம் கடத்தி வரப்படலாம் என்பதால், அங்கும் மத்திய அரசின் வருவாய் புலனாய்வு பிரிவினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.