கரூர்: வீட்டின் தொழுவத்தில் கட்டியிருந்தபோது திருடப்பட்ட கன்றும், மாடும், சந்தையில் போலீஸாரால் மீட்கப்பட்டது.கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி, முத்துக்கவுண்டன் வலசைச் சேர்ந்தவர், பொன்னான், 63. நேற்று காலை இவரது தொழுத்திலுள்ள, எருமை மாட்டில் பால் கறப்பதற்காக சென்றபோது, தொழுவத்தில் கட்டியிருந்த, எருமை மாடு மற்றும் கன்றினை காணவில்லைஇதுகுறித்து அரவாக்குறிச்சி போலீஸில், பொன்னான் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையில், உப்பிடமங்கலம் மாட்டுச்சந்தைக்கு போலீஸார் நேரில் சென்றனர். திருடுபோன எருமை மற்றும் கன்று, சந்தையில் இருந்து மீட்கப்பட்டு, பொன்னானிடம் ஒப்படைத்தனர். திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.