கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கோட்ட அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்களின், முதலாவது மாநாடு கிருஷ்ணகிரியில் நடந்தது.கோட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். "ஓசூர் அஞ்சல் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தபால்காரர் பதவிகள் ஏற்படுத்தி, காலியாக உள்ள குரூப் - டி பதவிகளை நிரப்ப வேண்டும்.கிராமபுற அஞ்சல் ஊழியர்களை நிரந்தரம் செய்து பென்ஷன் வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும்' என்பன உள்ளிட்டபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநாட்டில் அஞ்சல் நான்கின் கோட்ட செயலாளர் மணி, புறநிலை ஊழியர் சங்க செயலாளர் சந்திரன், தர்மபுரி கோட்ட செயலாளர் அறிவழகன், சேலம் மேற்கு கோட்ட செயலாளர் சஞ்சீவி, திருநெல்வேலி கோட்ட செயலாளர் ஜேக்கப்ராஜ் மற்றும் செல்வம், பெரியண்ணன், நாகராஜ், ராமமூர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோட்ட துணை செயலாளர் சிவசங்கரன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.