திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை, 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண பக்தர்கள் ரங்கா... ரங்கா... என பரவசத்துடன் முழங்க,பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து, திருக்கொட்டகையில் பிரவேசித்தார்.மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் காட்சி தந்தார்.பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 13ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல்பத்து உற்சவம் கடந்த, 14ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது. இன்று முதல், ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. முதல் நாளான இன்று அதிகாலை, 3:15 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. வழக்கத்தை விட ரங்கா ரங்கா கோஷம் குறைவாக ஒலித்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிக அளவில் போலீஸ், தேவை இன்றி குவிக்கப்பட்டு இருக்கிறர்கள். அனுபவம் இல்லாத சிலரின் ஆலோசனை படி போலீஸ் எல்லா இடத்திலும் தடுத்து ஏன். ரங்கனை சேவிக்க வருகிறோம் என்று பலர் முனுமுனுக்க கேட்கிறோம். இந்த அளவுக்கு போலீஸ் தேவை இல்லை. எல்லாயிடத்திலும் தடுப்புகள் போடப்பட்டு இருக்கிறது. ஒழுங்கு செய்ய கோவிலுக்குள் போலீஸ் மிக அதிகம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.