புதுடில்லி:""நிதி பற்றாக்குறையை குறைக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயம்,'' என, பிரதமரின், தலைமை பொருளாதார ஆலோசகர், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.தனியார், "டிவி' நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:மானியத்திற்காக அதிக பணம் செலவிட வேண்டியுள்ளதால், நிதி பற்றாக்குறை அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க துவங்கி விட்டோம்.மானிய விலையில் வழங்கப்படும், சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளோம்; டீசல் விலையை உயர்த்தியுள்ளோம். அந்த வகையில், வரும் காலங்களிலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிஉள்ளது.அவ்வாறு எடுத்தால் தான், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை, 2 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு, ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிதிப்பற்றாகுறைக்கு கடும் நடவடிக்கைகள் அரசியல்வாதிகளுக்கும்,அனாவசிய செலவுகளை குறைக்க அரசாங்கத்திற்கு வீண் செலவுகளை குறைக்க வேண்டியது கட்டாயம் .மக்களுக்கு தற்போது இருக்கும் நிதி நெருக்கடியே போதுமானது. இதற்கு மேல் மக்களால் நிதி கொடுமை தாங்க முடியாது.மக்களுக்கு கட்டுப்பாடு தேவையில்லை.மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றுவதாக புளுகும் அரசியல்வாதிகளுக்கு தான் கடும் நடவடிக்கை அவசியம் .
இந்தியா என்றால் அரசியல் தலைவர்கள், ஆளும் வர்க்கங்கள் மட்டுமே, பொது மக்கள் அவர்களுடைய குரல்கள் மற்றும் அவர்களுடைய குறைகள் எதுவுமே எங்குமே எடுபடாது. அப்படி இருக்க நீங்கள் மட்டுமே பேசுங்கள், நீங்கள் மட்டுமே செய்தி என்ற பெயரில் அவ்வப்போது ஏதாவது ஒன்றைக்கூறி மக்களை திசை திருப்புங்கள், எங்கிருந்து இந்த நிதி தட்டுப்பாடு அல்லது இது போன்ற தட்டுப்பாடுகள் வருகின்றன. உங்களிடமிருந்துதானே ? எதற்கு இந்த மானியம், இலவசம், ?? எது தேவையோ அதை செய்தாலே போதும், தற்போது இலவச வீடு, இலவச அரிசி, இலவச திருமண உதவி, இலவச சத்து மாத்திரை, இலவச பொங்கல் அரிசி, இலவச மின்சாரம், என்று கொடுத்துக்கொண்டே சென்றால் எதற்க்காக வேலை செய்யவேண்டும்? இது ஏழைகளுக்கு நல்லது செய்வது இல்லை மாறாக அவர்களை வேலை செய்யாமல் இருக்கச் செய்வதே ஆகும், இவர்களை நீங்கள் உங்கள் அதாயதிர்க்காகப் பயன்படுதுக்கொள்கிறீர்கள். நடு வளர்ச்சிக்கு இவர்களுடைய பங்கு என்று பார்த்தல் ஒன்றுமே கிடையாது, மாறாக, நீங்கள் உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால், இது போன்ற இலவசங்களைக் கொடுத்து ஒட்டு வாங்கி அவர்களை மேலும் மேலும் தவறான பாதைக்கு அழைத்து செய்வதை விட்டு விட்டு, ஆக்கப்போர்வ செயல்கல்களில் ஈடுபடுத்தவேண்டும், அதேபோல் மனியதிர்க்குப் பதிலாக உடல் நலம் பாதிக்கப்பாட்டவர்களுக்கு இலவச மருத்துவ வசதி செய்தி தரலாம்,.இலவச கல்வி தரலாம், இவற்றை எல்லாம் விட, நீங்கள் ஆடம்பர வாழ்வைத் துறந்தாலே போதும். ஒரு நபர் அமைதியாகத் தூங்க பல கோடி செலவில் அரசு பாது காப்பு வேண்டாம், நீங்கள் அனைவரும் ஒரு இடத்தில தங்கலாம், ஒரே காரில் பலர் பயணம் செய்யலாம், பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரம் வாகனங்கள் அணிவகுத்து செல்வதை நிறுத்தலாம், ஒரு நாளைக்கு நூறு தடவை டெல்லிக்கும் , வெளி நாட்டிற்கும், உள்நாட்டிலும் விமானத்தில் பயணிப்பதை நிறுத்தலாம் , ஒரு வழிப்பாதை என்ற பெயரில் பல கிலோமீட்டர் பயணித்து ஊர் சுற்றுவதை விட்டு விட்டு , ஒரு பாதையில் அனைத்து வாகனங்களும் இருபுறமும் சென்று வர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல் மிச்சம், பிச்சைக்காரர்களை உழைக்கக்கூடிய நிலையில் உள்ளவர்களை நதிநீர் இணைப்பு போன்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம், இப்படி ஒவ்வொரு மக்களையும் நாற்றுப்பற்றுடன் ஈடுபட பாடுபட முர்ப்படவேண்டுமே தவிர, நிதிப் பற்றாக்குறை என்று கூறி மீண்டும்மீண்டும் எப்படி வரி போடலாம் என்று நினைத்தால் மக்கள் சுனாமி ஏற்ப்படும், நீங்கள் அனைவரும் காணாமல் போவீர்கள், ஒரே ஒரு கேள்வி, முன்பெல்லாம் ஒரு நிலத்தில் ஒரு வீடு மட்டுமே இருந்தது, அதற்கு ஒரு வீட்டுவரி மட்டுமே இருந்தது, பிறகு தண்ணீர் வரி, பிறகு தண்ணீர் பயன்பாட்டிற்கு தகுந்த பணம், சரி போகிறது என்றால், தற்போது அடுக்கு மாடி கட்டிடம், ஒரு நிலத்திற்கு எத்தினை கட்டிடம், எத்தினை வீட்டு வரி, அதேபோல் அதைனை தண்ணீர் வரி, இதே நிலைதான் அனைத்து நிலையிலும், ஒரு பேருந்தில் சட்டப்படி அமருவதற்கு மட்டுமே அனுமதி, அனால் என்று மக்கள் அடைக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகின்றனர், இதே நிலைதான் இரயில்களிலும் ஆக இதே நிலைதான் எல்லா துறைகளிலும், உண்மையை மறைக்காமல் கூறுங்கள், அரசு இயங்குவது லபத்திலா அல்லது நட்டத்திலா ? அப்படி என்றால் தவறு எங்கே நடக்கிறது? இதற்க்குக் காரணம் யார்? பதவியில் இருக்கும்போது ஒரு ராகம் பாடுவீர்கள், பதவி ஓய்விற்குப் பிறகு வேறு ஒரு ராகம் பாடுகிறீர்கள்? மொத்தத்தில் மக்களை ஒரு மாட்டு மந்தையாக நடத்தவேண்டாம், உங்களை விட அதிகம் படித்தவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் அனால் அவர்களுடைய எண்ணங்கள் வெளியே தெரியாமல் இருக்கின்றன. இந்தியா நம் நாடு, இங்குள்ளவர்கள் நம் மக்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் மனசாட்சியோடு செயல்படுங்கள். வரி வரி என்று கூறுவதை விட்டு விட்டு, எப்படி எல்லாம் உங்கள் செலவுகளைக் குறைக்கலாம், என்று யோசித்து மக்களைக் காப்பாற்றுங்கள், அப்போதுதான் ஜனநாயகம் தழைக்கும். வந்தே மாதரம்
அதிரடி நடவடிக்கை என்று நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். கொளுத்த பணக்காரர்களின் ஆண்டு வருமானம் வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. மாநிலப் பணக்காரர்களாக இருப்பவர்கள், பிறகு இந்தியப் பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடிக்கிறார்கள், பின்பு உலகப் பணக்காரகளின் வரிசையில் இடம்பெறத்
துடிக்கிறார்கள். நாட்டில் சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே ஒழுங்காக வரி கட்டுகிறார்கள். வரி ஏய்ப்பு செய்பவர்கள்
சுவிட்ச் வங்கியில் பணம் போட்டு வைத்து இருப்பவர்கள் ஆகியோரிடமிருந்து ஒழுங்காக வருமான வரியைக்
கணக்கிட்டு பிடித்தாலே போதும் .முதலில் அரசியல்கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யவேண்டும்.
அதுதான் ஏற்கனவே உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் அறிவித்தாயிற்றே? அதன் மூலம் மானியங்களுக்கு கொடுக்கப்படும் தொகையை முற்றிலுமாக நீக்கிவிட முடியும். முதலில் உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் மூலம் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உலக வங்கி சொன்னதன் அடிப்படையில், மொத்த மானியத்தையும் நீக்கி விடமுடியும்.பிறகு வங்கியில் பணம் செலுத்துவதும் நிறுத்தப்படும். நாம் அனைவரும் இனி வெளிச்சந்தை விலையில் தான் பொருட்கள் வாங்கமுடியும், வாழ்க இந்திய அரசின் பொருளாதார மேதைகளும் அவர்தம் கொள்கைகளும். வாழ்க ஜனநாயகம் வாழ்க

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.