சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்ட நான்கு பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வைகுண்ட ஏகாதசியன்று முதல்வர் ஜெயலலிதா, பார்த்தசாரதி கோயிலில் விடியற்காலை 4 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார் என்ற செய்தியை இன்றைய தினமலர் இணையதளத்தில் படித்த பிறகு, அவருடைய போலித்தனம் இல்லாத பக்தியைப் பாராட்டத்தான் தோன்றுகிறது.
கடவுள் நம்பிக்கையில்லை என்பவர்களின் வீட்டில் இருப்பவர்கள் எல்லாருமே செல்லாத கோயில்கள் இல்லை கும்பிடாத கடவுள்கள் இல்லை யாகமும் சிறப்பு பூஜையும் மூடநம்பிக்கைகளைச் சாடுபவர்களின் கூடங்களில்தான் அதிகமாக நடைபெறுகின்றன. தன் வீட்டிலேயே தன் பகுத்தறிவு கொள்கைகளைப் புரியவைக்க முடியாதவர்கள், மேடைபோட்டு மற்றவர்களை கேலி பேசுகிறார்கள். கூரை ஏறி கோபுரத்தைக் காண முடியாதவன், வானம் கீறி வைகுண்டம் காட்டுவானாம்.
6 கோடி தமிழர்களின் தலைவர்கள் என தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள், நாம் அனைவரும் கொண்டாடும் அத்தனை பண்டிகைகளுக்கும் நம்மை வாழ்த்துவதுதானே நியாயம். தீபாவளியில் நம்பிக்கை இல்லையாம் ஆனால் தீபாவளியைக் கொண்டாடும் நம்பிக்கைவாதிகளின் ஓட்டு மட்டும் வேண்டுமாம். தீபாவளி கொண்டாடுபவர்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம் என்று தைரியமாக சொல்ல வேண்டியதுதானே.
வாழ்த்துவது மனிதநேயத்தின் மகத்தான வெளிப்பாடு. அதில் விருப்பு, வெறுப்பு இருப்பவர்கள் தன்னை அனைவருக்கும் தலைவர் என்று சொல்லிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.
ஜெயலலிதாவிடம் இந்த போலித்தனம் இல்லை தான் சார்ந்த மதத்தின் கடவுள்களை ஆத்மார்த்தமாக பூஜிக்கிறார். இஸ்லாம் மதத்தினர் மெக்கா செல்லவும், கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும், இந்துக்கள் முக்திநாத் செல்லவும் உதவுகிறார். தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லும் ஒரே தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். ரம்ஜான் நோன்பும் திறக்கிறார் கிறிஸ்துமஸ் கேக்கும் வெட்டுகிறார். எந்த மதத்தினர் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்பதில்லை. மக்களின் கொண்டாட்டங்களில் தானும் சேர்ந்து கொண்டு வாழ்த்துகிறார்.
இறைவனை இதயபூர்வமாக நமது முதல்வர் வழிபடுவதால்தான், இறையுணர்வு மிக்கவர்களைப் புண்படுத்தாமல் இருப்பதால்தான், இத்தனை பிரச்னைகளையும் சமாளிக்கும் திறனை அவருக்கு இறைவன் அளித்திருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை.
- எஸ்.வரதராஜன்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.