மதுரை: அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கண்மாயில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர். மதுரை மாவட்டம் ஒத்தவீடு அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் மகன் பிரேம்குமார் (19) குமாரத்தை சேர்ந்த முருகேசன் மகள் விஜயலெஷ்மி(17) இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று முதல் இருவரும் காணவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை அழகாபுரி கண்மாயில் துப்பட்டாவில் தூக்குபோட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து தகவல் தெரிவித்த பின் போலீசார் விசாரணை நடத்தி வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தற்கொலை செய்த இருவரது உடலையும் அனுப்பினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.