ராசிபுரம்: போதமலை மலைக்கிராமங்களில், 79 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மின் வசதியை, தமிழக சபாநாயகர் தனபால் துவக்கி வைத்தார்.ராசிபுரம் அடுத்த போதமலை பகுதியில், கீழூர், மேலூர், கெடமலை பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், விவசாயம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குடியிருந்தும், அவர்களுக்கு இதுவரை சாலை மற்றும் மின்வசதி ஏற்படுத்தித்தரவில்லை.அவர்களும், இது குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தனர். அதேபோல், தமிழக சபாநாயகர் தனபாலிடமும், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அப்பகுதியில் மின்வசதி ஏற்படுத்துவது குறித்து, அரசு அலுவலர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தில், பணிகள் துரிதமாக மேற்கொள்ள சபாநாயார் அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து, மலைப்பகுதிக்கு மின்பாதை கொண்டு செல்ல, 245 மின் கம்பங்கள், மூன்று புதிய டிரான்ஸ்ஃபார்மர், இரண்டு உயரழுத்த இரட்டை கம்பம் திறப்பான்கள், 10.9 கி.மீ., உயரழுத்த மின்பாதை, 4.2 கி.மீ., தாழ்வழுத்த மின்பாதை ஆகியவை அமைக்கப்பட்டது.அதன் மூலம், தற்போது மூன்று மலை கிராமங்களில் உள்ள, 267 வீடுகளுக்கும், மலைப்பகுதியில், 69 தெரு விளக்குகள் அமைக்க, 79 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வடுகம் அடுத்த மலை அடிவாரத்தில் நடந்த விழாவுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமை வகித்தார்.தமிழக சபாநாயகர் தனபால், 12 மலைவாழ் மக்களின் குடியிருப்புகளுக்கு புதிய மின் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:போதமலையில் உள்ள மலை கிராமங்களுக்கு கடும் முயற்சிக்கு பின், மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக, மலைகிராமத்திற்கு செல்ல சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வனத்துறை ஒப்புதல் பெற்ற பின் பத்து கி.மீ., தூரத்துக்கு, 12 அடி அகலத்தில் சாலை அமைக்கப்படும். அதன் மூலம் கீழூர், மேலூர், கெடமலை மலைக்கிராமங்கள் இணைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மீனாட்சிசுந்தரம், தலைமை பொறியாளர் ஜெயபால், யூனியன் சேர்மன்கள் பொன்னுசாமி, லட்சுமி, தமிழ்செல்வி, வெண்ணந்தூர் அட்மா திட்டத் தலைவர் தாமோதரன், ராசிபுரம் நகராட்சி சேர்மன் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.