மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆடுமேய்க்கும் சிறுவனுக்கு டெட்டனேட்டர் வெடித்து காயம் ஏற்பட்டது.நாகை மாவட்டம் கற்கோயில் தெற்குதெருவை சேர்ந்த நடராஜன் மகன் ராஜ்(18) மாற்று திறனாளி. இந்நிலையில் ரயில்வே டிராக் ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஆடுமேய்க்கும் போது ஒயர் பாக்ஸ் கிடைத்துள்ளது. அதை கல்லால் அடுத்து விளையாடிய போது அது வெடித்து கை, தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காயத்திற்கு கம்பவுண்டரிடம் காட்டி சிகிச்சை பெற்ற சிறுவன் மீது காயம் குறித்து சந்தேகம் கிளம்பிய போது டெட்டனேட்டர் வெடித்ததால்தான் காயம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர் அங்கு யார் கொண்டு வந்தது என வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.