குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் நடந்தது.பி.டி.ஏ., தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். நிர்வாகி பன்னீர் செல்வராஜ் வரவேற்றார். 1954ம் ஆண்டு முதல் நடப்பு கல்வி ஆண்டு வரை, இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள், தங்களது மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொண்டனர். பள்ளி பருவத்தில் நடந்த சம்பவங்கள், குடும்ப சூழ்நிலை, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், குடிநீர் தொட்டி, சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.