சேந்தமங்கலம்: மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், கன்றுக்குட்டி கருகி இறந்ததுடன், மாட்டுக்கொட்டகை மற்றும் வைக்கோல் போர் எரிந்து சாம்பலானது.
சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி புகழேந்தி, 47. அவருக்கு சொந்தமான பசுமாடும், எட்டு மாத கன்றுக்குட்டியும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கன்றுக்குட்டியை, மாட்டுக்கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றார்.அந்த கொட்டகையில், இரண்டு வைக்கோல் போரும் உள்ளது. இந்நிலையில், இரவு, 11.30 மணிக்கு, மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து மாட்டுக்கொட்டகை கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது. சூடு தாங்காமல், கன்றுக்குட்டி மற்றும் பசுமாடு கத்தியுள்ளது.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மாட்டுக்கொட்டகை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில், கன்றுக்குட்டி கருகி பரிதாபமாக இறந்தது. மேலும், மாட்டுக்கொட்டகை, இரண்டு வைக்கோல் போரும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.