ராசிபுரம்: பார்வை குறைபாடுள்ள பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை, போலீஸார் கைது செய்தனர்.ராசிபுரம், நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியாகண்வுடம்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் அம்சநாதன் (எ) அம்சா, 28. அவர், தவில் வாசிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதே தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ், 25, கோவையில் பெயிண்ட் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சுமதி, 19, பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி.இந்நிலையில், நேற்று மதியம், 1 மணிக்கு, வெங்கடேஷ் வெளியே சென்று விட்டார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த அம்சநாதன், சுமதியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதிர்ச்சி அடைந்து சுமதி கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
அதை பார்த்து பயந்துபோன அம்சநாதன், அங்கிருந்து தப்பி வெளியேறினார். இது குறித்து, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது.போலீஸார் வழக்கு பதிந்து, அம்சநாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.