ராசிபுரம்: அ.தி.மு.க., தீவிர தொண்டர் ஒருவர், தனது நெற்றியில், இரட்டை இலையை பச்சை குத்திக்கொண்டு வலம் வருகிறார்.ராசிபுரத்தை சேர்ந்த அங்கமுத்து, 43. அ.தி.மு.க., தீவிர ஆதரவாளரான அவர், திராவிடர் கழகத்தில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார். அதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தி.மு.க.,வின் கொள்கைகளை விளக்கிப் பேசினார்.அங்கிருந்து விலகிய அங்கமுத்து, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். தற்போது, மாவட்டம், நகரம், ஒன்றியம் என பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க, சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரம், சாதனை விளக்க பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில், அ.தி.மு.க.,வின் சின்னமான இரட்டை இலையை, தனது நெற்றியில் பச்சைக் குத்திக்கொண்டு வலம் வருகிறார்.அங்கமுத்து கூறுகையில், ""தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகள் பிடித்துள்ளதால், அக்கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன். எனது விசுவாசத்தை வெளிப்படுத்தவே, நெற்றியில் இரட்டை இலையை பச்சைக் குத்திக்கொண்டேன்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.