புதுடில்லி : டில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தலைநகர் டில்லியில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. இதனால் தலைநர் டில்லியே களேபரமாக இருக்கிறது. இந்நிலையில் இப்பிரச்னை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார். மேலும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.