KamalHassan against death penalty for rapists | பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு: கமல்ஹாசன் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு: கமல்ஹாசன் எதிர்ப்பு

Updated : டிச 24, 2012 | Added : டிச 24, 2012 | கருத்துகள் (89)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொச்சி: பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவதற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தமக்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவது சரியான வழி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை என்பதே, சட்டரீதியான கொலை என்று கூறியுள்ள கமல்ஹாசன், பாலியல் பலாத்காரம் நடந்த பஸ் என்னுடையது, என்னுடைய தலைநகரம், கற்பழிக்கப்பட்டவர் எனது சகோதரி, கற்பழித்தவர்கள் எனது சகோதரர்கள். இதனால் நான் மிகவும் அவமானப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
25-டிச-201211:20:36 IST Report Abuse
dori dori domakku dori அய்யா அன்பே சிவம் உம்முடைய வேட்டையாடு விளையாடு படம் எடுத்த விதம் ஒன்று போதுமே சமூகத்தில் இளம் குற்றவாளிகள் அதிகரிக்க .
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Coimbatore,இந்தியா
25-டிச-201204:59:24 IST Report Abuse
Rajesh இந்த மாதிரியான gang Rape க்கு எல்லாம் தூக்கு தண்டணைதான் கொடுக்க வேண்டும், இதற்கு விசாரனையே கூடாது. தனி ஒரு நபர் என்றால் வேண்டுமானால் மனோ ரீதியாக பாதிக்கப்பட்டாரா என விசாரிக்கலாம். இப்படிப்பட்ட தண்டணைதான் பின்னாளில் இக்குற்றங்கள் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். மனுநீதி சோழன் சொன்ன நீதியின்படி அந்த பசு அனுபவித்த அதே துயரத்தை ஈடுகட்ட குற்றம் செய்த தன் மகன் மீது தேர் ஏற்றி நீதி வழங்கினான். அவ்வாறே குற்றம் இழைத்த அந்நபர்களுக்கு அந்த பெண் அனுபவித்த அதே வளியை உணர்த்த அவர்களை கதற கதற சித்ரவதை செய்து அம்மிருகங்களை தூக்கிலிட வேண்டும். தண்டணையை நிறைவேற்றியதோடு விட்டுவிடாமல், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பசு மரத்தாணிப்போல், கட்டாயக் கல்வியான 1 லிருந்து 8 ஆம் வகுப்பு புத்தகங்களுக்குள்ளாக, எல்லா மாணவர்களுக்கும் இத்தகு குற்றங்களுக்கு இதுதான் தண்டணை என உணர்த்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் வருடத்தில் ஒரு நாள் இத்தகைய குற்றங்களை செய்யமாட்டோம் என உருதியெடுக்க வேண்டும். அன்று விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறையென்றால்தான் காந்தியே நினைவுக்கு வருகிறார். கமல் ஹாசன் கூறிய இதே கருத்தை ஒரு சுதந்திர போராட்ட தலைவர் "சகோதரர், சகோதரி" என இதே போன்ற கற்பழிப்பு சம்பவத்திற்கு கூறினார், ஒரு வேலை அத்தலைவரின் நெறியை பின்பற்றுகிறார் போலும்.
Rate this:
Share this comment
Cancel
sivasankaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201223:20:33 IST Report Abuse
sivasankaran முதலில் திரு கமல் அவர்களுக்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன். இவர் இப்படித்தான் அதி மேதாவித்தனமாக எதாவது பேசுவார். ராமன் யார் என்று கேட்டால் அது ஒரு கல் என்று சொல்லிவிட்டு இவரே கிருஷ்ணன் வேடம் போடுவார். யார் கடவுள் என கேட்டால் அன்பே சிவம் என சொல்லுவார். அதை சினிமாவாக்கி துட்டு பார்பார். ஆக நாத்திகம் பேசி கல்லா கட்டும் இவருக்கும் ஆதிக்கம் பேசி கட்டில் கட்டும் நித்திக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. பணம் திண்ணும் பிணக் கழுகுகள் இவர்கள். சாமானியனின் வலி உணராத கூட்டத்தின் உறைவிடம் இவர் கருத்து. டெல்லி சம்பவம் போன்ற சிறிதும் மனித தன்மையில்லாத குற்றங்கள் அதிகரிக்கும் போது (குறிப்பாக பெண்களுக்கு எதிரான) அதனை குறைக்க முயற்சிக்க கூடாது. இது போன்று மீண்டும் நடக்க விடாமல் தவிர்க்க வேண்டும்.அதற்கு கடுமையான தண்டனை விதிப்பே சிறந்ததாகும்.இது போன்ற ஆசாமிகளை என்கவுன்ட்டர் மூலம் போட்டு தள்ள வேண்டும்.இவர்கள் வாழ தகுதியற்றவர்கள். கோர்ட் மூலம் தூக்கு தண்டனை விதித்தால் இவர்கள் சிறிது காலம் வாழ காலம் கிடைக்கும். அது வரை பொறுத்திருக்க கூடாது. திரு கமல் அவர்கள் போன்ற கோடிகளில் கொழிக்கும் மேல் தட்டு மக்களுக்கு இது போன்ற சம்பவங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எப்படி இருப்பினும் அவர்களது பணம் அதனை கண்டு கொள்ளாமல் செய்துவிடும். மேலும் இவரை போன்ற ஆசாமிகளுக்கு gang rape என்பது ஒரு group sex அவ்வளவே. என்ன கொடுமை சரவணா இது. மேலும் இந்த கொடுமையான சம்பவத்தினால் ஒரு இந்தியன் என சொல்லிகொள்ளவே வெட்கமாக இருக்கிறது. பெண்மையை போற்றுவதில் முதன்மையானவர்கள் நாம் என்பது கமல் அவர்களுக்கு நினைவிருக்கட்டும். ஒரு பெண் தானாக முன் வந்து கேட்டு போவதில் தவறு இருப்பதாக கருத கூடாது. ஆனால் இது போன்ற சம்மதம் இல்லாத சம்பவத்தை எந்த ஒரு மனசாட்சி உள்ள மனிதனும் ஒப்பு கொள்ள மாட்டான். நன்றி. சிவா.
Rate this:
Share this comment
Cancel
சங்கத்தமிழன்,சென்னிவீரம்பாளையம். அது கமல்ஹாசன் என்பவரின் தனிப்பட்ட விமர்சனம் ,அவர் பிரபலமான நடிகர் என்பதால் அவர் விமர்சனம் நாம் கவனிக்கத்தக்கதாகிறது .இதற்கு நாம ஏன் டென்ஷன் ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
25-டிச-201211:26:54 IST Report Abuse
dori dori domakku doriதனி மனித ஒழுக்கம் தவறியவர்கள், உபதேசம் செய்வதால் விளையும் பையன்.......... sorry பயன் தீமையே ........
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
24-டிச-201221:04:59 IST Report Abuse
dori dori domakku dori இருக்குற பிரச்னை போதாது என்று , புது இம்சை
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
24-டிச-201221:04:50 IST Report Abuse
Guru படம்தான் புரியலனா.., பேசுறதுகூட புரியலையேப்பா
Rate this:
Share this comment
Cancel
kungajeevi - Madurai,இந்தியா
24-டிச-201220:53:24 IST Report Abuse
kungajeevi உக்காந்து யோசிச்சி பதில் சொல்லுங்கோ சார் தூக்கு தண்டனை வேணாம் வேறே என்ன தண்டனை குடுக்கலாம்ன்னு ,முதல்ல உங்கள மாதிரி கலைத்துறையில் இருக்கிறவங்க மதுவை ஒழிக்க என்ன செய்யணுமோ அதை செய்ங்க ,அரசு பார் களால் பல பேர் இன்று காம கொடூரர்களாக மாறி வருகிறார்கள், வழி காட்டிகளாக இருக்க வேண்டியவர்கள் தவறான முன் மாதிரிகளாகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
24-டிச-201220:48:16 IST Report Abuse
தமிழ் குடிமகன் அப்போ தூக்கு தண்டனை வேண்டாம்................ நறுக்................. தண்டனை கொடுத்து விடலாமா .
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
24-டிச-201220:34:08 IST Report Abuse
muthu Rajendran தூக்கு தண்டனை மனித குலத்திற்கு எதிரானது. ஒரு சட்டபூர்வமான கொலை என்பது மனித உரிமை கழகத்தின் கருத்து. ஆனால் மிக கொடுரமான குற்றத்திற்கு மட்டுமாவது மரண தண்டனை என்று இல்லாவிட்டால் குற்றவாளிகளுக்கு அச்சம் என்பதே இராது. அரபு நாடுகளில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் அங்கே தண்டனைகள் கடுமையாக இருப்பது தான். கருத்துகள் சொல்வது அவரவர் தன்மையை பொருத்தது. இந்த நாட்டின் புனிதமாய் மதிக்கும் பெண்மையை சீரழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெரிதல்ல என்பது தான் சமுக அக்கறை உள்ளவர் கருத்தாக இருக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
lalubab - Orissa,இந்தியா
24-டிச-201220:20:33 IST Report Abuse
lalubab இவருடைய குழந்தைகள் பத்திரமாக காரில் சென்று வருவதால் இவர் இப்படி பேசுகிறார். சினிமா உலகைச்சார்ந்தவர்களாலும், மது என்கிற அரக்கினாலும் மிருகவெறி ஏற்றப்படும் மனித மிருகங்கள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள ஏழைப்பெண்களையும், மத்திய தரத்துப்பெண்களையும் , ஆதரவற்ற குழந்தைகளையும் சூறையாடுகின்றனர். சாதாரண மக்களின் வலி உணராமல் இப்படி பிதற்ற வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை