Delhi rape protests: PM appeals for calm | அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்

Updated : டிச 24, 2012 | Added : டிச 24, 2012 | கருத்துகள் (12)
Advertisement
Delhi rape protests: PM appeals for calm அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்

புதுடில்லி: டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்து தங்களுடடைய நடவடிக்கைகளுக்கு உதவும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லியில், இம்மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், வெறிக் கும்பலால், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும், இரண்டு நாட்களாக, மாணவர்கள் சார்பில், டில்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டம், நேற்று தீவிரமடைந்தது. ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள, ரைசினா ஹில்ஸ், காங்., தலைவர் சோனியாவின் வீடு அமைந்துள்ள, ஜன்பத் ஆகிய பகுதிகளில், ஏராளமான மாணவர்கள் திரண்டனர். இவர்களை, போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதைத் தொடர்ந்து, டில்லியின் முக்கிய பகுதிகளில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விஜய் சவுக், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், சாலைகளில் தடுப்பு களை வைத்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.நிலைமை மோசமாவதை அறிந்த போலீசார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மாணவர்களை கலைக்க முயற்சித்தனர்.

அமைதி காக்க வேண்டுகோள்: இந்நிலையில், அமைதி காக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில்,

* மூன்று பெண்களுக்கு தந்தை என்ற முறையில், உங்களுடைய (நாட்டு மக்கள்) உணர்வுகளை ஏற்றுக்கொள்கிறேன்.


* நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.


* பெண்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.


* இச்சம்பவத்தில் தாமதமின்றி நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


* இது தொடர்பாக நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும்.


* எனவே நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்து எங்களுடடைய நடவடிக்கைகளுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ASRaja - Chennai,இந்தியா
24-டிச-201214:32:36 IST Report Abuse
ASRaja அவர மாதிரியே எல்லாரையும் இருக்க சொல்றாரு நம்ம பிரதம மந்திரி அய்யா.. ஹய்யோ ஹய்யோ..
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
24-டிச-201214:00:19 IST Report Abuse
manoharan போலீஸ் அதிகாரி ரதோர் ஒரு மாணவியை கற்பழித்து கொன்றான். அவனுக்கோ ஆறு மாதம் சிறை தண்டனை கொடுக்க பட்டது. அப்போது ஏன் இந்த போராட்டம் நடக்க வில்லை. ஏதோ அரசியல் பண்ணுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
24-டிச-201213:52:02 IST Report Abuse
Babu. M தூத்துக்குடியிலும் ஒரு இளம் குழந்தை கற்பழிக்க முயற்சி செய்ய பட்டு கொலை செய்ய பட்டார். ஆனால் இங்கு ஆளும் கட்சியும் அதை கண்டு கொள்ள வில்லை. எதிர் கட்சியும் அதை பத்தி ஏதும் வாயை துறக்க வில்லையே ஏன். காரணம் தமிழ்நாட்டு அமைச்சர்கள் தான் முதுகு எலும்பு இல்லாதவர்கள். பதவிக்காக எதையும் செய்பவர்கள். மக்களும் இப்படி தான் உள்ளனர். என்னையும் சேர்த்து.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201213:50:37 IST Report Abuse
Swaminathan Nath அத தான் இத்தனை வருடமாக செய்து வருகிறோம் ,,,,,,,, உருப்படியாக நீங்கள் எதுவும் செய்யவில்லை,. makkal கோபம் உலகுக்கு தெரியட்டும்....
Rate this:
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
24-டிச-201213:48:40 IST Report Abuse
Babu. M ஓகே... பொறுமையா இருக்கோம். ஆனால் உங்க பொண்ணுக்கும் சோனியா பொண்ணுக்கும் உங்க அமைச்சர்கள் பொண்ணுக்கும் இப்படி ஒண்ணு நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் porumaya irupengalaa
Rate this:
Share this comment
Cancel
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201213:33:59 IST Report Abuse
A.NAWAB JHAN, TRICHY. "என்னைப்போல்" அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள். அதுசரி இது தொடர்பாக நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும் என்கிறிர்களே, எப்படி நாடே கொந்தளித்தால் வெளிப்படையாக நடவடிக்கை எடுப்பிர்கள். இல்லையென்றால் நீங்கள் சோறு போட்டு வளர்க்கும் ஏவல் நாய்கள், புலனாய்வு துறையும், அமலாக்க பிரிவையும் ஏவி விடுவிர்கள். நல்லா இருக்கு உங்கள் ஆட்சியின் லட்சணம். இது தொடர்பாக நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
tamil nesam - chennai,இந்தியா
24-டிச-201213:18:46 IST Report Abuse
tamil nesam இதற்கு காரணம் மது. மது குடித்து விட்டு தான் மனிதன் மிருகமாக மாறி தவறு செய்கிறான். கற்பழிப்பு, கொலைக்கு காரணம் மது. எந்த சட்டம் வந்தாலும் இது தொடரும் மதுவை ஒழிக்காத வரை. மது குடித்தவனுக்கு சட்டம் பின் விளைவு பற்றி எதுவும் தெரியாது. இந்தியர் அனைவரும் இந்த டிரிங்கை நாடாமல் இருக்க பூரண மது ஒழிப்பு தீர்வு. மரண தண்டனை தீர்வு ஆகாது .
Rate this:
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
24-டிச-201213:16:55 IST Report Abuse
Hari Doss உடனடியாகத் தண்டனை வழங்க இந்தியா ஒன்றும் காட்டுமிராண்டி அரசோ அல்லது முஸ்லீம் அரசோ இல்லை என்பதையும் கவணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
usha - kumbakonam,இந்தியா
24-டிச-201213:10:19 IST Report Abuse
usha இப்பிரச்னையை தன் பிரச்சனையாக ஏற்று ஒரு நல்ல தண்டனையை அளிப்பார் என்று நம்மிபிகையுடன் உள்ளோம். பாரபட்சம் பார்க்காமல் தண்டனை உடனடியாக தரப்பட வேண்டும். இல்லாவிடில் மக்களே அவர்களை பிடித்து நடு ரோடில் நிற்க வைத்து அணு அணுவாக கொல்லப்பட வேண்டும். இதுவே நம் நாட்டின் கடைசி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். இதன் பிறகு பெண்கள் என்றாலே ஒரு பயம் வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
guest - New Delhi,இந்தியா
24-டிச-201211:44:36 IST Report Abuse
guest தயவு செய்து ''பாலியல் வன்முறை" என்ற வார்த்தை பிரயோகம் செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை