புதுடில்லி: மாணவர்கள் போராட்டத்தை மாவோயிஸ்டுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு ஆதரவாக டில்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசாரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, "போலீசார் நடத்திய தடியடி குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டனம் வருகிறது. ராஷ்டிரபதி பவன், நாட்டின் பெருமைமிகு இடம். இதற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தாலும் மக்கள் எங்களை கேள்வி கேட்பார்கள். மேலும், போலீசார் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். 18 போலீசார் காயமடைந்துள்ளனர். அதை தடுக்கவே போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள்" என்று தெரிவித்தார். மேலும், மாணவர்களுடன் உள்துறை அமைச்சர் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "கேள்வி கேட்பது ஈஸி., நாளை பா.ஜ.,வினரோ அல்லது மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடனோ போராட்டம் நடத்தினால் அவர்களுடன் எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியுமா" என கேள்வி எழுப்பியுள்ளார். ஷிண்டேவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாட்டுல என்ன நடந்தாலும் பொது மக்கள் தலை குனிந்து கொண்டே போக வேண்டும். நீங்க மட்டும் அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்து பாதுகாப்பாக வாழுங்கள். எங்களில் ஒருவர் பாதிப்பு அடையும் பொது எதிர்த்து கேள்வி கேட்டாளோ,போராடினளோ காலம் காலாமாக நக்ஷலைட்டு,மாவோயிஸ்டு என முத்திரை குத்தி விடுகிறீர்கள்.என்ன உங்கள் ஜனநாயகம்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.