Advertisement
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு "தாமினி" என்று பெயர் சூட்டிய போராட்டக்காரர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,13:59 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 24,2012,14:03 IST

புதுடில்லி: ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மாணவிக்கு "தாமினி" என பெயர் சூட்டியுள்ளனர் அவருக்கு நீதி கேட்டு போராடுபவர்கள்.

டில்லியில், இம்மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், வெறிக் கும்பலால், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டார். தற்போது டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை திருப்திகரமாக இருந்த போதும் அவர் தொடர்ந்து அபாய கட்டத்தில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில், கற்பழிப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும், கடந்த சில நாட்களாக, மாணவர்கள் சார்பில், டில்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரது பெயர் உள்ளிட்ட விவரம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் போராட்டக்காரர்கள் அவருக்கு "தாமினி" என பெயர் சூட்டியுள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு வெளிவந்த இந்தி படம் தான் "தாமினி". இதில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நீதி கேட்டு போராடுவது தொடர்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.


சப்தர்ஜங் மருத்துவமனை முன்பாக குவிந்துள்ள தாமினியின் ஆதரவாளர்கள், தாமினி போராடு; நாங்கள் உனக்காக இருக்கிறோம் என்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
சங்கத்தமிழன்,சென்னிவீரம்பாளையம். மருத்துவ மாணவி உயிர்பிழைக்க இறைவனை பிரார்த்திப்போம்.
Rate this:
0 members
1 members
12 members
Share this comment
Paradesi Indian - Seoul,தென் கொரியா
24-டிச-201215:48:03 IST Report Abuse
Paradesi Indian இதனை வைத்து.....ஒவ்வொரு கட்சியும் அரசியல் செய்வது வேதனையானது.........எதினால்...இந்த பெண்ணுக்கு இவ்வளவு முக்கியத்துவம்......இந்தியாவில்....எத்தனையோ பெண்கள் இதுபோல இழிவு படுத்த பட்ட போது இல்லாத ஒரு அரசியல் சதுரங்கம்.......இப்போது நிறைவேறுவது.........கீழ்த்தரமான அரசியலை காட்டுகிறது.........
Rate this:
4 members
1 members
34 members
Share this comment
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
24-டிச-201215:26:47 IST Report Abuse
Vaishnavi.Ne ஏற்கனவே இந்த பெண்ணுக்கு நிர்பயா (பயமற்றவள்) என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் பெயர்சூட்டி உள்ளதே?
Rate this:
3 members
0 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.