புதுடில்லி : டில்லி மாணவி கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று நாடு முழுக்க குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநில உள்துறை செயலர்கள் கூட்டத்தை மத்திய அரசு வருகிற 4ம் தேதி கூட்டியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்கவும் விரைவு கோர்ட்டுகளை அதிகப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் டில்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை வருகிற ஜனவரி 3ம் தேதி ஆரம்பமாகும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.