புதுடில்லி: இந்தியா ரஷ்யா இடையே 300 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் 42 சுகோய் 30 விமானங்கள் மற்றும் 71 எம். ஐ., 17 வி 5 என்ற நடுத்தர ரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 13வது இந்திய ரஷ்ய வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் மன்மோகன் சிங்குடனான இந்த சந்திப்புக்குப்பின், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி, ரஷ்யாவின் எம்.ஐ., மற்றும் காமோவ் ரக ஹெலிகாப்டர்கள் வாங்க எல்காம் சிஸ்டம்ஸ் மற்றும் வெர்டோலெடி ரசி என்ற நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.
அடுத்த ஒப்பந்தம், சுமார் 2.2 பில்லியன் டாலர் செலவில் இந்திய ராணுவத்திற்கு 42 சுகோய் 30 ரக போர் விமானங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு சுகோய் ரக போர் விமானங்கள் தயாரிப்பது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை ரஷ்யா வழங்கும். தற்போது இந்திய விமானப்படையில் 170 சுகோய் ரக போர்விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போதைய ஒப்பந்தத்தின் படி அடுத்த நான்கு முதல் 5 ஆண்டுகளில் இந்திய விமானப்படையில் இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை 272 ஆக உயரும்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி, மொத்தமாக வாங்க உத்தேசித்துள்ள 71 எம்.ஐ., 17 வி 5 ரக ஹெலிகாப்டர்களில், 59 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கும், 12 நக்சல் எதிர்ப்பு படைக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையேயான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.