தாம்பரம்:வண்டலூர்
பூங்காவை, நேற்று முன்தினம் மட்டும், 17 ஆயிரம் பேர் கண்டு
ரசித்தனர்.பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும், பூங்கா விடுமுறை தினமான,
டிச., 25 மற்றும் ஜன., 1, 15 ஆகிய தேதிகளில், வண்டலூர் உயிரியல் பூங்கா
இயங்கும் என்ற அறிவிப்பாலும், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது.நேற்று முன்தினம் மட்டும், 17 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு
ரசித்தனர். இன்றும் ஏராளமானோர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரிகள்
கூறுகையில், "காணும் பொங்கல் அன்று, ஒரு லட்சத்துக்கும் அதிகமான
பார்வையாளர்கள் வருவர் என்று எதிர்பார்க்கிறோம். இதனால், மேற்கொள்ள வேண்டிய
வசதிகள் குறித்து, மின்சார வாரியம், குடிநீர் வாரியம், போலீஸ், தீயணைப்பு
துறை, போக்குவரத்து மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன், வரும், 28ம் தேதி
ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.