புதுடில்லி: டில்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவருவது குறித்து விவாதிக்க சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பா.ஜ. வலியுறுத்தியுள்ளது. கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு பஸ்சில் இருந்து வீசப்பட்டார். தற்போது அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தினால் டில்லியில் மாணவர்கள், பல்வேறு மகளிர் அமைப்பினர் தொடர்ந்து மூன்று நாட்களாக டில்லியின் இந்தியா கேட், உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகி்ன்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை , டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்துபேசினார். இந்த சம்பவம் தொடர்பாக பிரதமரின் மனைவி குருசரண்கவுர் கூறுகையில், போராட்டக்காரர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். உங்களின் உணர்வு எனக்கு நன்றாக புரிகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம் . மேலும் இனி பெண்கள் பாதுகாப்பிற்காக தகவல் தெரிவிக்க , தொலை தொடர்புத்துறை மூன்று இலக்க எண்ணை அறிவித்துள்ளது. குற்றவாளிகளை தினம் தினம் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சிறப்பு பார்லி.கூட்டத்தை கூட்டுக:
இந்தசூழ்நிலையில் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் , ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். பின்னர் பா.ஜ. லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் , அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் எனவும் , சிறப்பு பார்லிமென்ட்டை கூட்ட வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறினார். மிகவும் சங்கடமான நிலையில் இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை தேவை என்றார்.
இதற்கிடையே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமர் மன்மோகன்சிங் , மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை தொடர்பு கொண்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனால் இந்த விவகாரம் ஓய்வதாக தெரிவில்லை. டில்லியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை தான் காணப்படுகிறது.
கூட்ட வேண்டிய அவசியம் இல்லை: ஷிண்டே
டில்லி மாணவி சம்பவம் தொடர்பாக சிறப்பு பார்லிமென்ட்டை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இது தொடர்பாக டி.வி.சானலுக்கு அளித்த பேட்டி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு கோர்ட் அமைத்து வழக்கினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் கோரிக்கை தொடர்பாக சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை. என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதுக்கு இவ்வளவு குதிக்கிறீர்களே குஜராத்தில் பல பெண்கள் தங்கள் கணவன் முன்னால் பலாத்காராம் செய்யப்பட்டு வயிற்றில் உள்ள குழந்தையை கீறி எடுத்து பந்தடித்து விளையாடினர்களே,அந்த காட்டுமிராண்டிகளை என்ன செய்ய போகிறீர்கள். கரசெவார்களை எரித்த அந்த பாவிகளுக்கும்,இந்த மாபாதக செயலை செய்த எல்லாருக்கும் என்ன தண்டனை கொடுக்க போகிறீர்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.