வாஷிங்டன்,: தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாசனுக்கு, அமெரிக்காவின் உயரிய தொழில் நுட்ப விருது அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும், தேசிய தொழில் நுட்ப பதக்க விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாசன் உட்பட 12 விஞ்ஞானிகள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு, இந்த விருது, வெள்ளை மாளிகையில் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.கண் பார்வை கோளாறை சரி செய்ய உதவும் புற ஊதா கதிர் லேசர் தொழில் நுட்பத்தை, 1981ம் ஆண்டு, சீனிவாசன் கண்டுபிடித்தார். இவருடைய கண்டு பிடிப்பு, கண் மருத்துவத் துறையில் உதவிகரமாக உள்ளது.கடந்த, 1950ம் ஆண்டு, சென்னை பல்கலைக் கழகத்தில் படித்தவர் சீனிவாசன். 1956ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், இயற்பியல் ரசாயனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.