எம்பபானே: ஆப்ரிக்க நாடான ஸ்வாசிலாந்தில், பெண்கள் குட்டை பாவடை அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.ஆப்ரிக்காவில் உள்ள, குட்டி நாடு, ஸ்வாசிலாந்து. இங்கு, மன்னராட்சி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நாட்டின் மன்னர், எம்ஸ்வாட்டி, இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வார். இதற்காக, மேலாடை அணியாத கன்னிப் பெண்கள், குட்டை பாவடை மட்டும் அணிந்து கொண்டு, மன்னரின் அரண்மனைக்கு அணிவகுத்துச் செல்வார்கள். இதில், தனக்குப் பிடித்த பெண்ணை தேர்வு செய்து, மன்னர் எம்ஸ்வாட்டி திருமணம் செய்து கொள்வார். இந்த வகையில் இதுவரை, 13 பெண்களை எம்ஸ்வாட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதற்கிடையே, இந்த நாட்டில், கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார் வந்ததால், அதற்குரிய காரணம் ஆராயப்பட்டது. பெண்கள் குட்டை பாவடை அணிவதால் தான், ஆண்களின் பார்வை, பெண்களிடம் திரும்பி, கற்பழிப்பு குற்றங்கள் அதிகரிப்பதாக, அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, போலீஸ் அதிகாரி எச்லீட்டா கூறியதாவது: ஸ்வாசிலாந்தில், பெண்கள் இனி, குட்டை பாவடை அணியக்கூடாது. மீறி அணிந்தால், அவர்களுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை அளிக்கப்படும். மன்னர் திருமணம் செய்து கொள்வதற்காக, நடக்கும் திருவிழாவில் மட்டும், பெண்கள் மேலாடை இல்லாமல், குட்டை பாவடை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, போலீஸ் அதிகாரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.