ரோம்: தன்னுடைய அலுவலக ரகசியங்களை, திருடிய சமையல்காரருக்கு, போப் பெனிடிக்ட், மன்னிப்பு வழங்கினார்.வாடிகனில், போப் பெனிடிக்ட்டின், சமையல்காரராக இருந்தவர் பாலோ கேப்ரியல். இவர், பெனிடிக்ட் அலுவலகத்திலிருந்து, முக்கிய கோப்புகளை திருடி, புலனாய்வு பத்திரிகைகளுக்கு அளித்தார். இதனால், வாடிகனில் நடக்கும் ஊழல்கள், செக்ஸ் விவகாரங்கள், உள்ளிட்ட விஷயங்கள் பத்திரிகைகளில் அம்பலமானது.போப் அலுவலக பைல்களை திருடிய குற்றத்துக்காக, கேப்ரியலுக்கு, மே மாதம், ஒன்றரை ஆண்டு சிறை தண்டன அளிக்கப்பட்டது.இதற்கிடையே, கிறிஸ்துமசையொட்டி, கேப்ரியலுக்கு மன்னிப்பு அளிக்க, போப் பெனிடிக்ட் முடிவு செய்தார். நேற்று முன்தினம், சிறைக்கு சென்று, கேப்ரியலை சந்தித்து, மன்னிப்பு அளித்தார். இதையடுத்து, கேப்ரியல், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இதன் மூலம், கேப்ரியல், குடும்பத்துடன், கிறிஸ்துமசை கொண்டாட வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், "இனி அவர், வாட்டிகன் குடியிருப்பில் தங்கியிருக்க முடியாது. மீண்டும் அவருக்கு வாடிகனில் வேலையும் அளிக்கப்பட மாட்டாது' என, வாட்டிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.