காபூல்: ஆப்கானிஸ்தானில், பெண் போலீஸ் சுட்டதில், அமெரிக்க ஆலோசகர் ஒருவர் பலியானார்.ஆப்கன் தலைநகர் காபூலில், கவர்னர் அப்துல் ஜபார், அலுவலகம் அருகே உள்ள, போலீஸ் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார் நர்கஸ் என்ற பெண் போலீஸ். கவர்னர் அலுவலகத்திற்கு அருகே உள்ள கடையிலிருந்து, அமெரிக்காவை சேர்ந்த ஆலோசகர் ஒருவர் வந்தார்.திடீரென பெண் போலீஸ் நர்கஸ், அந்த அமெரிக்கரை, சுட்டுக்கொன்றார்."கவர்னர் மாளிகை வளாகத்தில், சந்தேகத்திற்குரிய நபர்களை சுடலாம்' என, போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த பெண் போலீஸ், அமெரிக்கரை சுட்டதாக கூறப்படுகிறது.இருப்பினும், இது தொடர்பாக, அந்த பெண் போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் துறை ரீதியான விசாரணை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.