லண்டன்: பிரிட்டனில், டாக்டர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், இந்திய டாக்டர்கள் பலர் தோல்வியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனில், பணிபுரியும் டாக்டர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, டாக்டர் தொழில் செய்ய முடியும்; பெரிய மருத்துவமனைகளில் பணிபுரிய முடியும்.இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த டாக்டர்கள், இந்த தேர்வில் தொடர்ந்து தோல்வியடைவதாக அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.கடுமையான இந்த தேர்வில், பிரிட்டனை சேர்ந்த, 9 சதவீத டாக்டர்களும், இந்தியாவை சேர்ந்த, 63 சதவீதம் பேரும், பாகிஸ்தானை சேர்ந்த, 62 சதவீதம் பேரும், நைஜீரியாவை சேர்ந்த, 68 சதவீதம் பேரும் தோல்வியடைந்துள்ளதாக, கூறப்பட்டுள்ளது.மருத்துவர்களுக்காக நடத்தப்படும், இந்த தேர்வில், நான்கு முறை தேர்வு எழுத அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்கு மேலும், தோல்வியடைபவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தகுதியற்றவர்களாக கருதி, வேலை மறுக்கப்படுகிறது.பிரிட்டன் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர், ரமேஷ் மேத்தா குறிப்பிடுகையில், ""தற்போது மருத்துவர்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வு முறையே தவறானது. கடுமையான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசத்தை, ஆறு முறையாக அதிகரிக்க வேண்டும்,'' என்றார்.பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஜாய்ஸ் ராபின்ஸ் குறிப்பிடுகையில், "" மருத்துவர்களுக்கான தேர்வில் தேர்ச்சியடைய, நான்கு முறை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதே அதிகம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.