வாஷிங்டன்: அமெரிக்காவில், துப்பாக்கி வைத்திருக்க தடை வரலாம் என்பதால், ஏராளமானவர்கள், இப்போதே துப்பாக்கிகளை வாங்கி குவித்து வருகின்றனர்.அமெரிக்காவில், துப்பாக்கி சூடு சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. கடந்த வாரம், ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 26 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தினால் கலக்கமடைந்த அமெரிக்க அரசு, "பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு, தடை விதிக்கலாமா?' என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.இதற்கிடையே, பென்சில்வேனியா, டெக்சாஸ், மிசோரி உள்ளிட்ட மாகாணங்களில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய துப்பாக்கிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன."பொது மக்கள் துப்பாக்கி வைத்திருக்க தடை வரலாம்' என்ற, கருத்து பரவலாக காணப்படுவதால், இந்த துப்பாக்கி சந்தையில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, துப்பாக்கிகளை வாங்கி செல்கின்றனர். இன்னும் பல கடைகளில், அதிக விலைக்கு துப்பாக்கிகள் விற்கப்பட்டன.ஆனால், விலையை பொருட்படுத்தாத, துப்பாக்கி ஆர்வலர்கள், இரண்டு மூன்று துப்பாக்கிகளை வாங்கி சென்றனர்.துப்பாக்கி வைத்திருக்க தடை விதிக்கும் அரசின் ஆலோசனையை இவர்கள் எதிர்க்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.